ரொம்ப நாளாச்சு இங்க ஏதும் எழுதி. வேலை நிறைய; படிக்கணும்னு வாங்கி வச்ச புத்தகங்கள் நிறைய. தமிழ்மணம். கீற்று எல்லாம் படிக்கறதுக்கே நேரத்தைப் பொறுக்கிச் சேர்க்க வேண்டியிருக்கு. அப்படியே ராசா பக்கம் போய்ப் பார்த்தா, ஏறக்குறைய மூணு வாரத்துக்கு முன்னாடி 'அழகே அழகு'ன்னு உருகியிருக்கார். அதோட விட்டாரா, என்னையும் அதுல இழுத்து விட்டிருக்கார். என்னையும் ஞாபகம் வச்சிருக்கார்ங்கறதுல ரொம்ப மகிழ்ச்சி!
சரின்னுட்டு, நம்ம கண்ணுக்கு எதெல்லாம் அழகுன்னு யோசிக்கப் போனா, சிலது தேறிச்சு. அதை எழுதறக்கு முன்னால, ராசாவை இந்த விளையாட்ல கூப்பிட்ட அனு எதை அழகுன்றாங்கன்னு பாக்கப் போனேன். நம்ம பட்டியல்ல வர்றது எல்லாம் அங்கயும் இருக்கு. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு நினைக்காம, அப்படியே இங்க எழுதிருக்கேன்!
ரெண்டு வாரம் முன்னாடி என் நண்பரோட பொண்ணு நந்தனாவோட ரெண்டாவது பிறந்த நாள் விழாவுக்குப் போயிருந்தேன். அங்க வந்திருந்த குழந்தைகள், அவங்க விளையாட்டு எல்லாம் பாத்துக்கிட்டிருக்கும்போது இன்னொரு நண்பர்ட்ட சொன்னேன். 'சென்னைக்குப் போயிடலாமான்னு வர்ற எண்ணத்தை மாத்த எனக்குத் தெரியிற ஒரே காரணம் இந்தக் குழந்தைகள்தான்'னு. சென்னையில் குழந்தைகள் இல்லன்னு அர்த்தமில்ல. ஆனா, இங்க பழகின குழந்தைகளை எல்லாம் பாக்க முடியாமப் போயிடுமேன்னுதான். ஆக, அழகுன்னு நினைச்சா முதலில் வர்றது குழந்தைகள்தான். 2002-ல வாடகை வீடு பாக்க சாவி கேட்டுக் கீழ் வீட்டுக் கதவைத் தட்டும்போது திறந்த ரெண்டு குழந்தைகள் கிருத்திகாவும், உத்ராவும், அதே கட்டடத்துல இருந்த காவ்யாவும், மனிஷாவும், பக்கத்து வீட்ல இருந்த மேக்னா, இப்போ நண்பர்கள் வித்யா - சாகர் தம்பதியின் குழந்தை நந்தனா, இப்போ மேல் வீட்ல இருக்கிற தெலுங்குக் குடும்பத்துல என்னைப் பாத்து (அல்லது என் தாடியைப் பாத்து) ஏனோ பயப்படுற குழந்தை அப்படின்னு நீளும் பட்டியல். இவங்க மட்டுமில்ல, கடைல, தெருவில அப்படின்னு பல இடங்களிலும் பாக்கிற குழந்தைகள், எந்தவொரு சூழ்நிலையையும் மறக்கடிச்சு என்னையும் குழந்தையா மாத்திடுறதால, அதுதான் பேரழகு.
அப்புறம், யாரையும் அழகாக்கக் கூடிய சக்தி கொண்ட புன்னகை அழகு. அதுவே, குழந்தைகளின் புன்னகை, ஆகா அதுதான் சொர்க்கம்.
2002-ல பிடிச்ச வாடகை வீடுன்றது ஒரு சின்ன அறை, மூணாவது மாடில. இடுப்புல துண்டை மட்டும் கட்டிக்கிட்டு, ஆடி, குதிச்சு, வானம் பார்த்துத் தரையில படுத்துக்கிட்டு, உடம்பு மேல பட படன்னு பலமாவோ, சின்ன சின்ன ஊசி மாதிரி வேகமாவோ, அல்லது வெறும் தூறலாவோ வந்து தழுவுற மழையை அனுபவிச்சதுண்டு. அந்த மழை அழகு.
மழை நின்னப்புறம், தெருவில இறங்கி நடந்துகிட்டே ரோட்டோரம் இருக்கிற மரங்களோட தாழ்ந்த கிளையில இருக்கிற இலைகளை அசைச்சு அந்தத் தூறலில் சிலிர்த்ததுண்டு. பக்தி தலைக்கேறிய காலத்துல கோவில் மணியடிச்சப்போ வந்த உணர்ச்சி, சிலிர்ப்பெல்லாம் கூட கிட்ட வர முடியாதுன்னு தோணுது. மழை இல்லைன்னாலும், இந்த மரங்கள், செடிகளை அப்பப்போ தொட்டுக்கிட்டு, தடவிக் கொடுத்துக்கிட்டு நடக்கறது வழக்கமாயிடுச்சு. நம்ம கண்ணுக்கு அழகா இருக்கணுமேங்கறதுக்காக வெட்டுப்பட்டு நிக்கிற செடிகளைக் கண்டா கண்ணீர் வர்றது மட்டும்தான் குறை. இந்த மரங்கள், கிளைகள், இலைகள், மலர்கள் எல்லாம் அழகு.
அலுவலக வளாகத்துலயும், பூங்காக்கள்லயும், ஒண்ணா உக்காந்துக்கிட்டு, கண்களால பேசிக்கிட்டு, பொய்க்கோபம் காட்டிக்கிட்டு, அன்பையோ ஆறுதலையோ வண்டி வண்டியாக் கொட்டும் கண்களோட பாத்துட்டிருக்கிற ஜோடிகள் அழகு.
பெண்கள் அழகு; மீட்டிங்-ல உக்காந்துக்கிட்டு நான் கிறுக்கிற ஓவியங்கள் அழகு; கன்னட எழுத்துக்கள் அழகு, அதிலயும் வீணை வடிவத்துல இருக்கிற சில எழுத்துக்கள் இன்னும் அழகு; பேருந்தில உக்காந்துக்கிட்டிருக்கும்போது திடீர்னு கேட்கிற பெண்-தமிழ்க் குரல்கள் அழகு.
தமிழ் அழகு. இசை அழகு. இசை, நாட்டியம் அழகு. எல்லாத்துலயும் ஒளிஞ்சிருக்கிற தாள லயம் அழகு. கவிதை அழகு. நியாமான கோபம் பேரழகு. சாந்தமும் அழகு.
காதல் அழகு, நினைவுகள் அழகு. என்ன சொல்ல, வலிகளும் அழகு.
பழைய கோயில்கள் அழகு; பக்தி அழகு; உறவுகள் அழகு; உறவொண்ணும் இல்லைன்னாலும், மனசு கனிஞ்சு வர்ற அன்பு அழகு;
மழையை ரசிச்சு நடக்கும்போது, ஒழுகுற குடிசை வீட்டைப் பாத்தவுடனே, பாடிக்கிட்டிருந்த 'சின்னச் சின்ன மழைத் துளிகள்' பாட்டை நிறுத்த வச்சு, உள்ள அழுற குழந்தையோட சேர்ந்து மனசை அழ வச்சு, மழையோட சேர்ந்து கண்ணீரை ஓட வைக்கிற மனசாட்சி அழகு.
'கூரையின் ஓட்டை வழி நட்சத்திரம்' பாட்டு அழகை ரசிக்கும்போதே, வலிக்கிற மனசு அழகு. தன்கிட்ட இருக்கிற அழுக்கை எல்லாம் உடனே பாத்துக்கிற மனசு பேரழகு. அதுக்கு வழி செஞ்ச அறிவு இன்னும் அழகு. ஆக மொத்தம் எல்லாம் சேர்ந்து அடிக்கிற குழப்பமும் அழகு. அது முடிஞ்சு வர்ற தெளிவும், அதுக்குள்ள இருக்கும் குழப்பங்களும் அழகு. அந்தக் குழப்பங்களை அப்போதைக்காச்சும் மறக்கடிக்கிறது குழந்தையோ, மழையோ, உறவோ, அன்போ, இசையோ எதுன்னாலும் அது அழகு.
Showing posts with label சங்கிலிப் பதிவு. Show all posts

Sunday, May 06, 2007
Tuesday, June 27, 2006
கடலில் சேர்ந்த ஆறு
நண்பர் ராசா என்னையும் ஒரு ஆறு பதிவு போடச் சொல்லியிருக்கார்.
என்ன எழுதறதுன்னு யோசிச்சா ஒண்ணுமே தோண மாட்டேங்குது. முதலாவது பேச்சுத் தமிழ்ல எழுதிப் பழக்கமில்ல. அப்புறம், சும்மா ஜாலிக்காக எழுதினதுமில்ல இது வரைக்கும். இப்பக் கூட, பிடிச்ச பாட்டு, படம்னு எழுத மனசு வரல. மயூரன் சொன்ன மாதிரி, இந்த மாதிரிப் பதிவுகள்ல சுய முன்னிறுத்தல் இருக்கறதுக்கான வாய்ப்புகளும் இருக்கு. அதாவது என்ன சொன்னா நம்மளைப் பத்தி நல்ல அபிப்பிராயம் உண்டாகும்னு தெரிஞ்சு அத எழுதறது. இப்பக் கூட, நான் பண்ணின தப்புகளைப் பத்தி எழுதினாக் கூட, அதுக்கும் பின்னாடி எனக்கு இருக்கிற உள்நோக்கம் எனக்குத் தெளிவாத் தெரியும். என்ன பண்றதுங்க, இப்படியே பழகிப் போச்சு. இதில இருந்து தப்பிச்சு எழுதலாம்தான் பொதுவா. ஆனா என்னைப் பத்தி, என்னோட குழப்பங்களைப் பத்தி, என்னோட பிரச்சினைகளைப் பத்தி மட்டுமே எழுதத் தோணுது. அவ்வளவு சுயநலம்.
இதோ, இப்ப நான் எட்டு வயசுல பண்ண ஒரு காரியம் பத்தி எழுத ஆரம்பிச்சேன். இதை ஊருக்கே சொல்லணுமா-னு ஒரு கேள்வி மனசுல. அவ்வளவுதான், அதை அழிச்சுட்டேன். இப்போ என்னதான் எழுத?
அதனால, நான் பண்ணியிருக்க வேண்டாம் அல்லது பண்ணியிருக்கணும்னு இப்போ நினைக்கிற, ஊருக்கே தெரிஞ்சாலும் தப்பில்லன்னு நான் நினைக்கிற ஆறு விஷயங்களை மட்டும் சொல்லப் போறேன். அடைப்புக்குறிக்குள்ள இருக்கறது என்னோட மனசாட்சி.
1. பத்தாவது படிக்கும்போது, பள்ளிக்கூடத்த விட்டு வேற பள்ளிக்கு மாறிப் போற ஒரு முன்னாள் நண்பன், வெளியே இருந்து நண்பர்களை அனுப்பிக் கூப்பிட்டப்போ, வீறாப்பா மாட்டேன்னு சொல்லாம இருந்திருக்கணும். ஒரு வருஷம் கழிச்சு அப்பா கூட வண்டியில உக்காந்து போறப்போ, அதே மாதிரி அவனும் அவங்கப்பா கூட வந்தான். ஒரு நொடி திரும்பிப் பாக்கத்தான் நேரம் இருந்துச்சு. அவனும் பாத்த மாதிரி இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்துருக்கும். (அப்போ, பெரிய கோவக்காரன், ஆனாலும் பின்னாடி வருத்தப்படற நல்ல மனசுக்காரன். அப்படித்தானே?)
2. பன்னிரெண்டாவதுல, தமிழ் செய்யுள் வகுப்பு நான் எடுத்தப்போ, வேதியியல் வாத்தியார் மேல இருக்கிற கோவத்துல, பெண்களைப் புகழ்ந்து இருந்த ஒரு கவிதை/செய்யுளைக் குதறி எடுத்து, மொத்தமா பெண்களைப் பத்தித் தப்பா சொல்லாம இருந்திருக்கணும். குறைஞ்சபட்சம், அதைப் பத்தி ஒரு பொண்ணு அடுத்த நாள் கேட்டப்போ, உள்மனசு சொன்ன மாதிரி அது தப்புனு ஒத்துக்கிட்டிருந்திருக்கணும். (ஓஹோ, வகுப்புல பாடம் எடுத்தீங்களோ? வாத்தியாரையே பகைச்சுக்கிட்டீங்களோ?)
3. அதே வருஷம், திருப்புத் தேர்வு எழுதும்போது வந்த பொருளாதாரப் பிரிவுக்குப் பாடம் எடுக்கிற டீச்சர், அரையாண்டுல எத்தனை பாடத்துல நூத்துக்கு நூறுனு ஆசையாவும், அக்கறையாவும் கேட்டபோதாவது, பதில் சொல்ல முடியாத உண்மை உறைச்சு கொஞ்சம் ஒழுங்காப் படிச்சிருக்கணும். ('நான் நல்லாப் படிச்சவன்தான், வயசுக் கோளாறு' அப்படின்னு சொன்னா ஒரு ஹீரோதான?)
4. என்னோட மாமா எனக்கு நியூமராலஜி பாத்து, பேரோட ஸ்பெல்லிங்கையும், கையெழுத்தையும் மாத்தச் சொன்னப்போ தைரியமா, எனக்கு நம்பிக்கை இல்லனு சொல்லியிருக்கணும். இப்போ அவங்களுக்கு எழுதுற மெயில்-ல மட்டும் அந்த ஸ்பெல்லிங் பயன்படுத்துற போலித்தனத்துல இருந்து தப்பிச்சிருக்கலாம். (பகுத்தறிவு?)
5. மனசுக்குப் பிடிச்ச பொண்ணு உக்காந்து பாத்துட்டிருக்கிற உற்சாகத்துல, உயரமான மரங்களுக்கு இடையில கட்டி வச்ச வலையில (இந்த வயசுல) குட்டிக் கரணம் போட்டுக் காட்டாம இருந்திருக்கணும். இப்போ எல்லாம் முடிஞ்சப்புறம், நினைச்சா என் மேலயே வர்ற கோவத்துல இருந்தாவது தப்பிச்சிருக்கலாம். ம்ம்ம்ம்.... ஒரு விதத்துல இது சிரிப்பாதான் இருக்கு. அவ்வளவு மோசமில்லை. (ஓஹோ! மூன்றாம் பிறை கமல்னு நினைப்பா?)
6. எத்தனையோ நண்பர்கள், தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க எல்லார்கிட்டயும் கட்டாயம் கடிதம் போடறேன், ·போன் பண்ணறேன்னு சொல்லாம இருக்கலாம். குற்ற உணர்ச்சியாவது இல்லாம இருக்கும்.
இப்போ யோசிச்சு என்ன பண்ண? ஒண்ணும் பண்ணமுடியாது. அதாவது, ஆத்துத் தண்ணியைக் கடலுக்குப் போனப்புறம் குடிக்க முடியாது. காலம் கடந்து போச்சு. பெருமூச்சை விட்டுட்டு, இந்தப் பதிவையும் முடிப்போம்.
சரி, நான் ஒரு ஆறு பேரைக் கூப்பிடணுமாமில்ல! நான் அதைச் செய்யப் போறதில்ல. ஏன்னா, இந்த ஆறும் கடல்ல சேந்தாச்சு! (நம்ம பேருக்கு அர்த்தம் தெரியும்ல?)

Wednesday, May 24, 2006
ஒரு சுய-மறு-பரிசீலனை
வலைப்பதிவர் பெயர்: தன. வித்யாசாகரன்
வலைப்பூ பெயர் : தெளிவு, chumma
சுட்டி(url) :
http://vidyasa.blogspot.com
http://vidyasakaran.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: திருநெல்வேலி, பொள்ளாச்சி, பெங்களூர் (சொந்த ஊர், வளர்ந்த ஊர், வசிக்கும் ஊர்)
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வலையில் கண்டுகொண்டதுதான். மாலன் அவர்களது கட்டுரையொன்றின் வழி.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : மார்ச் 2004 (இதன் முன் rediff-இல் ஒரு வலைப்பூ ஆரம்பித்து, தொடராமல் விட்டு விட்டேன்)
இது எத்தனையாவது பதிவு: அதிகமில்லை, 22
இப்பதிவின் சுட்டி(url): http://vidyasa.blogspot.com/2006/05/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
தமிழ்: சிந்தனையை ஒழுங்காகப் பதிவு செய்து, என் கேள்விகட்கு விடையறிய உதவுமென்ற எண்ணம். இப்போது கிறுக்கல் தளமாகி விட்டது. பரவாயில்லை.
ஆங்கிலம்: என் உணர்வுகளைச் சிலருடன் பகிர்ந்து கொள்ள
சந்தித்த அனுபவங்கள்: அதிகமில்லை.
பெற்ற நண்பர்கள்: மிகக் குறைவு. என் நோக்கமும் அதுவல்ல
கற்றவை: வாசித்தவை நிறைய உண்டு. கற்றவை மிகக் குறைவு. பிறரது எண்ண்ங்களைப் பற்றிய, பல்வேறு புதிய விதயங்களைப் பற்றிய பொதுவான புரிதல் வளர்ந்திருக்கிறது.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: பெரிய வித்யாசமில்லை. தாளில் எழுதாமல் தளத்தில் பதிகிறேன். என் சுதந்திரம் என்னிடம், எப்போதும்போல் பத்திரம்.
இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து குழம்பித் தெளிந்து, குழம்பித் தொடர்தல்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: என் profile-இல் உள்ளது தவிர வேறொன்றுமில்லை.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: நன்றி! ஒரு சுய பரிசீலனைக்கு உதவியமைக்கு. :-)

Subscribe to:
Posts (Atom)