Showing posts with label முன்னுரை. Show all posts
Showing posts with label முன்னுரை. Show all posts
Monday, March 15, 2004
முன்னுரை மீண்டும்
இந்த வலைப்பூ ஆரம்பித்த விவரத்தை இன்னும் நண்பர்களிடம் சொல்லவில்லை. காரணங்கள் உள. இன்னும் எத்தனை நாட்கள் தொடர்ந்து இதில் எழுதுவேன் என்று தெரியாத நிலை. அப்புறம், வாசிப்பவர்களின் கருத்துக்களை உள்ளிடுவதற்கான வழிமுறைகளை எல்லாம் செய்து விட்டு அப்புறம் அறிவித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம். இதை நிறைவேற்ற வேலைகள் எதுவும் இல்லாத ஒரு வார இறுதி கிட்ட வேண்டும். விரைவில் நிகழும் என்று நம்புகிறேன்.
Saturday, March 13, 2004
முன்னுரை
நீண்ட நாட்களுக்கு முன்பே ஒரு முறை, வலைப்பூ ஒன்றைத் தொடங்க முயன்றிருந்தேன். அதாவது, ஐந்து மாதங்களுக்கு முன்பு. இப்போது மீண்டும், ஆசை தூண்ட, மறுபடியும் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணமுண்டு.
இதற்குப் பெயர் என்ன வைப்பது என்று யோசிக்கும்போது, தெளிவு என்ற பெயர் மனதில் தோன்றிற்று. அதன் பின் யோசிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. இதைத்தானே தேடிக் கொண்டிருக்கிறேன்.
இதற்குப் பெயர் என்ன வைப்பது என்று யோசிக்கும்போது, தெளிவு என்ற பெயர் மனதில் தோன்றிற்று. அதன் பின் யோசிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. இதைத்தானே தேடிக் கொண்டிருக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)