Tuesday, March 14, 2006

நானும் நானோ?

பாழ் எழுதிய 'நீயாகிய நீ' கவிதையால் தூண்டப்பட்டு...

என்னைத் தொழுகிறேன்தான்.
அதன் முன்,
முன்னிற்கும் என்னில்,
நானாகிய என்னால்
செய்யவும்,
அறியவும் இயலாதன,
நான்
செய்யவும்,
அறியவும் விரும்புவன,
கண்டும், கேட்டும்,
அறிந்தும், அறியாமலும் அஞ்சுவன
அனைத்தையும் ஏற்றுவது கண்டிலையோ?
இனி,
நானும் நானோ?
என் முன்னிற்பதுவும் நானோ?

4 comments:

sathesh said...

சுவையான கவிதை வித்யாசாகரன்....

//நானும் நானோ?//

...ம்..அப்படித்தான் இருக்கவேண்டும்,ஏனெனில் 'நான்'
மட்டுமே நானல்லவே...

//என் முன்னிற்பதுவும் நானோ? //

நீயும் 'நான்' எனில்
நானும் 'நான்' எனில்
இயலாதன,விரும்புவன,அஞ்சுவன
எனதெனில்,
'நான்' சுமந்தது ஏற்று
முன்னிற்பதுவும் 'நான்'தானே!

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

பாழ்,

நன்றி.

நான் இதை எழுதும்போதே நினைத்தேன், நீங்கள் சொல்வது போலவும் கருதலாமே என்று.
ஒரு வகையில் சரிதான்.
இதைத் தொடர்ந்து, ஓர் ஒழுங்கான முறையில், கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்தால், ஒரு வேளை, அழகான தத்துவ விவாதம் ஒன்று கிடைக்கக் கூடும்.

ஆனால் என்ன பயன்? 'நான்'-ஐ மறக்கடிக்கும் ஓர் அழகிய தருணத்தின் முன் அது பொடிப்பொடியாகும்.

-வித்யா

sathesh said...

//ஆனால் என்ன பயன்? 'நான்'-ஐ மறக்கடிக்கும் ஓர் அழகிய தருணத்தின் முன் அது பொடிப்பொடியாகும்.//

'நான்'-ஐ மறக்கச்செய்யும் ஒன்று உண்டா?

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

பாழ்,

பதில் வளர்வதால், புதிய பதிவாக இடுகிறேன்.

-வித்யா