
கடவுள், கருணை
என்று சொல்லிக்கொண்டு
யாரும் என்னிடம் வந்துவிட வேண்டாம்.
நான்
உங்கள் முகத்தில்
உமிழக் கூடும்.
அல்லது
என் கூர்நகங் கொண்டு
முகத்தைக் கிழிக்கக் கூடும்.
என்
அறியாமை கண்டு சிரிக்கவோ,
அல்லது
எனக்கு ஞானம் வர வேண்டி அழவோ,
உங்கள் மதம்சொல்லிக் கொடுத்திருக்கலாம்.
என்ன இழவானாலும்,
என் காதில் விழாதபடிச் செய்யுங்கள்.
அது நல்லது,
உங்களுக்கு.
9 comments:
நன்றாகவுள்ளது...
உங்கள் மற்ற பதிவுகளையும் படித்தேன் சுவையாக உள்ளது...
எச்சரிக்கைக்கு நன்றி நண்பரே. :-)
Thanks a lot, Paazh and Kumaran.
Problem with me is, I end up writing things, which I may not agree with later. This is one of them. At least the rudeness in words. :-(
Something is wrong with my Murasu Anjal today, couldn't write in Tamil.
-Vidya
நேத்து எடுத்த முடிவு, இன்னைக்கு வேற மாதிரி தெரியறதும் கூட ஒரு வகையில வளர்ச்சி தாங்க வித்யா.. so no problem.. ;-)
ராசா,
நன்றி.
ஆனா இது வளர்ச்சியா?... ரெண்டு வித்தியாசமான மனநிலைகள் மட்டும்தான்னு தோணுது.
ஏதோ ஒரு வட்டத்துக்குள்ள சுத்தி சுத்தி வர்றேன்... அம்புட்டுத்தேன். வட்டம் கொஞ்சம் கொஞ்சமா பெருசாகற மாதிரி இருக்கு. அந்த வகையில வளர்ச்சின்னு சொல்லிக்கலாம். வளர்ந்து வளர்ந்து என்னத்த சாதிக்கப் போறோம்னுதான் தெரியல.
-வித்யா
ராஜ்,
நன்றி...
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
இந்தப் பக்கத்துக்குப் போங்க. நீங்க ஆங்கிலத்துல டைப் பண்ணினா, யுனிகோட் தமிழ்ல மாத்திக் கொடுக்கும். அதை அப்படியே copy பண்ணி paste பண்ணிடுங்க. நான் இப்படித்தான் செஞ்சுக்கிட்டிருக்கேன் கொஞ்ச நாளா. இதுக்கு முன்னாடி முரசு அஞ்சல் பயன்படுத்திக்கிட்டிருந்தேன். இப்போவும் ஏதாவது save பண்ணி வைக்கணும்னா அதுதான்.
கமெண்டுக்கு மட்டும்தான்னா இந்த லிங்க் போதும்.
-வித்யா
நிரம்ப கோபமாயிருக்கிறீர்களே ..
இந்தப் பக்கம் வந்ததுண்டா?
நன்றி தருமி சார்!
வந்திருப்பதாவது? நீங்கள் பதிவுகளை இடக் காத்திருந்து வாசித்திருக்கிறேன். பின்னூட்டம் இட்டதில்லை. மற்றபடி உங்கள் பதிவுளில் அனேகமாக எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன்.
நன்றி என்பதற்கு மேல் வேறென்ன சொல்ல..?
Post a Comment