Monday, June 19, 2006

பசுக்கொலை செய்யுங்கள் (அ) பாதுகாப்பற்ற நிம்மதி

தொடரும் அறிதலில்
செத்து மடிகின்றன
நான் வழிபட்டவை
வணங்கியவை
ரசித்தவை
என எத்தனையோ
புனிதப் பசுக்கள்.

இன்னும் வியப்பு,
நானும் சில
வளர்த்திருக்கிறேன்
நான் சிலவாக
வளர்ந்திருக்கிறேன்.
கொல்லுங்கள் எல்லாவற்றையும்.

எல்லாமே எனக்குப் பால் தந்தன.
ஆயினும்
நன்றி மறக்கும் வேளையிது.

பசுவற்ற பாழ்வெளியில்,
பாதுகாப்பு இல்லையென்றாலும்,
நிம்மதி இருக்கும்.

4 comments:

Unknown said...

உள்குத்து மேட் ஈஸி புத்தகம் எங்கே கிடைக்கும்?:-))

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

வருகைக்கு நன்றி, செல்வன்!

ஆனாலும், எதிலேயோ மாட்டி வைக்கப் பாக்கறீங்க போலிருக்கே!
உள்குத்து எதுவும் வச்சு நான் எழுதலை. குறிப்பா எதைப் படிச்ச பிறகுன்னு சொல்லி ஒரு பசுவைப் பத்தி மட்டும் விவாதம் வேண்டாம்னுதான் இப்படி.
எல்லாப் பசுவும் போகட்டுமே! பாடமா மட்டும் படிச்சுக்கணும்னு ஒரு எண்ணம்.

அடடா, இதை எழுதும்போதுதான் பட்டுனு ஞாபகம் வருது. அதானா விஷயம்!
கவலைப் படாதீங்க holy ox!
காளைகளையெல்லாம் ஒண்ணும் செய்யறதா உத்தேசமில்லை, at least இப்போதைக்கு! :-)

Unknown said...

//அடடா, இதை எழுதும்போதுதான் பட்டுனு ஞாபகம் வருது. அதானா விஷயம்!
கவலைப் படாதீங்க holy ox! //


இல்லைங்க holyox சொல்லலை.

புனித பசுன்னு சொன்னதும் இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது:-)

சரி..நீங்க தான் உள்குத்து இல்லைன்னுட்டீங்களே.So the matters rests then and there

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

ஓ! நான் எதையோ miss பண்ணிட்டேன் போலிருக்கே!
ம்ம்ம்... என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கணும்னு குறுகுறுப்பாதான் இருக்கு. புத்தி போகுமா!
சரி விடுங்க, நீங்க சொன்ன மாதிரி மேட்டர ரெஸ்ட்-ல விட்டுருவோம்!
:-)