Thursday, February 01, 2007

சொற்சிலுவைகள்

சொற்களும்
நம்மைப் போன்றவையே!

கட்டாயம் ஒரு நாளில்,
நான் ஏன் பிறந்தேன்,
என்னால் ஆவதென்ன - என்று
அவற்றிற்கும் தோன்றத்தான் செய்கிறது.

பிறப்பித்தவன்
என்ற சுமையோடு,
அவற்றின் சிலுவைகளும்
எனக்கு.

சொற்களும்
சிலுவை போன்றவையே!
நான் அறையப்படுகிறேன்,
என் சொற்களில்,
என் சொல்லில்.

10 comments:

சேதுக்கரசி said...

நல்ல கவிதை.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

நன்றி சேதுக்கரசி!
கொஞ்ச நாள் இந்தப் பக்கம் வரலை. அதான் தாமதம், பின்னூட்டத்தை வெளியிட.

- வித்யா

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

@சேதுக்கரசி
அப்படியே உங்க பதிவு பக்கம் பார்க்கலாம்னு வந்தா, பொல்லாத மௌனமா இருக்கே! :)

சேதுக்கரசி said...

இப்போதைக்குப் பதிவிடறதா எண்ணமில்லை.. அதான். சரி, அன்புடன் குழுமத்தில் புதுசா இணைஞ்ச வித்யாசாகரன் நீங்க தானா? இந்தக் கவிதையை அங்கேயும் அனுப்பியிருந்தேன்.

சேதுக்கரசி said...

தமிழ்மணத்தில் மறுமொழி நிலவரம் தெரியச் செய்யுங்கள். இன்னும் நிறையப் பேரைச் சென்றடையும்.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

ஆம், அது நானேதான். என் பதிவை அனுப்பியிருந்தமைக்கு நன்றி.
மறுமொழி நிலவரம் தெரியச் செய்ய என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. அதைத்தான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

சேதுக்கரசி said...

//மறுமொழி நிலவரம் தெரியச் செய்ய என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை//

எனக்குத் தெரிந்த தகவல்களை அனுப்புகிறேன்.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

மிக்க நன்றி சேதுக்கரசி!
உங்கள் மெயில் கிடைத்தது. பதிவு கருவிப்பட்டை நிறுவாததுதான் பிரச்சினையாக இருந்ததென்று நினைக்கிறேன். இப்போது செய்து விட்டேன். இனி மறுமொழி நிலவரத்தில் என் வலைப்பதிவு வருமென்று நினைக்கிறேன். பார்ப்போம்.
மறுபடியும், மிகுந்த நன்றிகள்! :)

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

ஆகா வந்திருச்சேய்!
தினமலர் பதிவு - மறுமொழி நிலவரத்தில் வருது. ஆனால், இந்தப் பதிவு வரலை! :(

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

இதுவும் வந்திருச்சே! :)
பின்னூடக் கயமையல்ல! ஆர்வக் கோளாறு என்று மன்னிக்க.