Friday, February 16, 2007

தினமலர் - ஐகோர்ட்

நீதிமன்றம் என்ற சொல் புழக்கத்தில் உள்ளபோதும், அதைப் பயன்படுத்தக்கூடாது என்று அப்படியென்ன உறுதி தினமலருக்கு? மற்ற எல்லா செய்தித்தாள்களும் நீதிமன்றம் என்று எழுதும்போது தினமலர் மட்டும் கோர்ட் என்ற எழுதும் காரணம் என்ன?
அதுவும் போக, தமிழக அரசு, தமிழில் வெளியிடும் அறிக்கையில் உள்ள நீதிமன்றம் என்ற சொல்லையும், கோர்ட் என்று மொழிபெயர்த்து ஒரு தமிழ்ச் செய்தித்தாளில் அச்சிட வேண்டிய அவசியம் என்ன?
'ஐ'கோர்ட் என்று சொல்லும்போது ஆங்கில அறிஞர்களின் அழகுணர்ச்சி அடிபடுவதன் வலியுணர்ந்து கொள்ளுமா தினமலர்?

6 comments:

Anonymous said...

kalvikadalan enru ezhulthaamal
vuidyasagaran enru ezhuthum athee kaaranamaaka irukkum!

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

இன்னும் கொடுமை, தமிழக அரசு, நீதிமன்றங்களில் தமிழில் வாதாடலாம் என்று வெளியிட்ட அறிக்கையிலும் இவ்வாறு மொழிமாற்றம் செய்தே வெளியிட்டது தினமலர்.

Anonymous said...

Vidya sakaran Tamil peyaraa?? Athi mudhla mathunga... I don't know why we give so much importance for small things.. Take it easy man..

Anonymous said...

Let the paper change its name as "Dhina Pushpam"

குழலி / Kuzhali said...

//Vidya sakaran Tamil peyaraa?? Athi mudhla mathunga... I don't know why we give so much importance for small things.. Take it easy man..
//
வழக்கம்போல எப்போதெல்லாம் தமிழ் பற்றி பேசினாலும் அப்போதெல்லாம் வெளிப்படும் அடிமுட்டாள்தனமான வாதங்களில் ஒன்று, அனேகமா இதை எழுதிய அனானியோட பிள்ளைகளுக்கு அந்த அனானியோட பிள்ளைகளே தான் பெயர் வைத்துக்கொள்ளும் பழக்கம் இருக்கின்றது போல.... ஆனால் வித்யாசாகரன் உங்கள் வீட்டில் உங்கள் பெயரை உங்கள் பெற்றோர்கள் வைக்கும் பழக்கம் தானே இருக்கின்றது.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

குழலி, நன்றி!
//வித்யாசாகரன் உங்கள் வீட்டில் உங்கள் பெயரை உங்கள் பெற்றோர்கள் வைக்கும் பழக்கம் தானே இருக்கின்றது.
நல்ல பதில். :)
அனானியின் இற்றுப்போன வாதத்துக்குப் பதில் சொல்ல வேண்டுமா என்று யோசித்தேன்.
உள்ள பிரச்சினையை விட்டு விட்டு, நீ எப்படிக் கேட்கலாம் என்று கேட்பது என்ன உத்தியோ?

// I don't know why we give so much importance for small things.. Take it easy man..
அக்கறை(?)க்கு நன்றி!
சிறிய பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டுமா என்று விடுவது அறிவுடைமையெனத் தோன்றலாம் அனானியாரே. சிறிதா, பெரிதா என்பது நம் வயிறு நிறைவதைப் பொறுத்தது என்று நினைப்பது அறிவுடைமையல்லவே!