
நேற்று, 'Gone with the wind' (Margaret Mitchell) படித்து முடித்தேன். இடையில் சிறிது இழுத்தது போல் தோன்றினாலும், மிகவும் அருமையான நாவல். எல்லா நல்ல நாவல்களையும் போல, முடித்த பின், சற்று நேரம் இருந்து யோசிக்க வைத்தது. இன்னும் கொஞ்ச நாளைக்கு அதன் கதாபாத்திரங்கள் மனதிலிருந்து நீங்கப் போவதில்லை.
முடித்தேனா? அடுத்து, பாலகுமாரனின் 'பயணிகள் கவனிக்கவும்' மூன்றாவது முறையாகப் படிக்கத் தொடங்கினேன். இதைக் கடைசியாகப் படித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கங்கு வெட்டி, படித்து முடித்தேன், அப்படியொன்றும் சிறந்த நாவலாக இப்போது தோன்றவில்லை என்றாலும். பிறகு, வார இறுதியின் மிகப் பெரிய வேலையான துணி துவைப்பதை முடித்தேன்.
முடித்தேனா? அடுத்து, பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்து 'குயில் பாட்டு'. அதன் பின், 'கண்ணன் பாட்டு'.
இத்தகையதொரு நாள் புதிதில்லை எனக்கு. ஒரே நாளில் இவ்வளவு படிப்பதுவும் புதிதில்லைதான். வீட்டில் தனியாக இருந்தேன், அதுவும் புதிதில்லை. கல்லூரி நாட்களில் நான் மிகவும் ரசித்தது, அறை நண்பர்களனைவரும் ஊருக்குப் போய் விட்ட நாட்களைத்தான். பெங்களூர் வந்த பிறகு கூட, பெயர் தெரியாத தெருக்களில், பூங்காக்களில், ஏதோ கன்னட நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகளில் எனத் தனியாக அலைந்ததுண்டு.
நேற்று இயலவில்லை. 'வார்த்தை தவறி விட்டாய்' படித்ததும், புத்தகத்தை மூடி வைத்தேன். சட்டையை அணிந்து கொண்டேன். வீட்டை விட்டுக் கிளம்பி, தெருக்களில் இலக்கின்றி நடக்கத் தொடங்கினேன். வெறும் 'போர்' அடித்ததுதான் காரணம் என்று நினைத்தேன்.
இல்லை போலிருக்கிறது.
5 comments:
வார்த்தை தவறியது யாரோ..
நீங்க தான் யார் கிட்டயும் அதிகம் பேச மாட்டேங்கரீங்களே.. பேசுங்க அப்புறம் இப்படி தனியா நடக்க வேண்டியிருக்காது..
ராசா,
யாரும் தந்தாத்தானே, தவறுவதற்கு? :-)
தனியா நடக்க வேண்டியிருக்கேன்னு அதை நிறுத்தறதுக்காகப் பேசவா? எல்லார்கிட்டேயும் பேசிக்கிட்டிருக்கும்போதே, தனியா இருக்கறது மாதிரி ஒரு உணர்வு. என்ன பண்றது? யார்கிட்ட பேசினா அது வராதோ, அவங்ககிட்டப் பேச வேண்டியதுதான். ஆனா, அதுதான நடக்க மாட்டேங்குது!
விடுங்க ராசா, இது அப்பப்ப வரும், போகும். எல்லாம் சரியாயிடும். எவ்ளோ பாத்திருக்கோம்!
- வித்யா
நல்லா எழுதுறீங்க.
-மதி
Thanks for the encouraging words, Mathy!
Probably, you didn't like my latest post. (http://vidyasa.blogspot.com/2006/03/blog-post.html#links)
I didn't like it much too. :-)
Sorry, couldn't write in Tamil now.
-Vidya
I have seen the movie gone with the wind. If you had noticed, this story has a strange resembelance to ponniyin selvan.
Post a Comment